திருவாரூரில் இடைத்தேர்தல் நடந்தாலும் நடக்கலாம், நடக்காமலும் போகலாம்…! தமிழக பாஜக தலைவர் தமிழிசை
இடைத்தேர்தலைவிட மக்களவை தேர்தலில் அதிக கவனம் செலுத்துவதே எங்கள் நோக்கம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறுகையில், திருவாரூரில் இடைத்தேர்தல் நடந்தாலும் நடக்கலாம், நடக்காமலும் போகலாம். திருவாரூரில் தேர்தலை சந்திக்க மு.க.ஸ்டாலினுக்கு உள்ளுக்குள் பயம் இருக்கிறது. இடைத்தேர்தலைவிட மக்களவை தேர்தலில் அதிக கவனம் செலுத்துவதே எங்கள் நோக்கம். முதல்வருடனான சந்திப்பில் கூட்டணி குறித்து ஏதும் விவாதிக்கப்படவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.