தமிழகத்தில் பாஜக தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி பெறும் – எல்.முருகன்

Default Image

தமிழகத்தில் பாஜக தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி பெறும் என்று  எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் இன்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சட்ட மன்ற தேர்தலில் பா.ஜ.க தனித்து நின்றாலும், 60 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.அதிமுக – பாஜக கூட்டணி உறவு சிறப்பாக உள்ளது. மும்மொழி கொள்கையில் யாரும் அரசியல் செய்ய கூடாது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்