தமிழகத்தை யூனியன் பிரதேசமாக மாற்றினால் கூட அதிமுக அரசு மவுனமாக இருக்கும் – ப.சிதம்பரம்
தமிழகத்தை யூனியன் பிரதேசமாக மாற்றினால் கூட அதிமுக அரசு மவுனமாக இருக்கும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சத்திய மூர்த்தி பவனில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிரான கண்டனக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், சர்தார் வல்லபாய் படேல் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் அல்ல.வல்லபாய் படேல் காங்கிரஸ் தலைவர் ஆவார் . வரலாற்றில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஒரு தலைவர் கூட கிடையாது. அதனால் காங்கிரஸ் தலைவர்களை ஆர்.எஸ்.எஸ் திருடிக் கொண்டது என்று பேசினார்.
காஷ்மீர் விவகாரத்தில் நேருவுக்கும் சர்தார் வல்லபாய் படேலுக்கும் ஒரே கருத்து தான் இருந்தது.ஆனால் பாஜகவினர் நேருவுக்கும் படேலுக்கும் ஒத்த கருத்து இல்லை என்று பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதிமுக அரசு எந்த மசோதாவையும் முழுமையாக படித்து பார்க்காமல் ஆதரவு அளிக்கிறது . தமிழகத்தை யூனியன் பிரதேசமாக மாற்றினால் கூட அதிமுக அரசு மவுனமாக இருக்கும் என்றும் பேசினார்.