எஸ்.பி.பி மறைந்தாலும் கானக்குரல் பாடல்கள் என்றுமே மறையாது – ஓ.பன்னீர்செல்வம்
எஸ்.பி.பி மறைந்தாலும் அவரது கானக்குரல் பாடல்கள் என்றுமே மறையாது என தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் 15-க்கும் மேற்பட்ட பாடல்களை பல்வேறு மொழிகளில் பாடி ஒளிப்பதிவு செய்து சாதனை படைத்தவர் பாடகர் எஸ்.பி.பி அவர்கள் உடல்நல குறைவால் எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு, திரையுலகினர், அரசியல்வாதிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
அதில், திரையிசை உலகில் தனக்கென தனி இடம் பெற்ற திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு சொல்லொணாத் துயரத்தை அளிக்கிறது. S.P.பாலசுப்ரமணியம் அவர்கள் மறைந்தாலும் அவரது கானக்குரல் பாடல்கள் என்றுமே மறையாது ஒலித்துக் கொண்டே இருக்கும். அவரது பெருமைகளை நினைவூட்டிக் கொண்டே இருக்கும் என முண்டக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
திரையிசை உலகில் தனக்கென தனி இடம் பெற்ற திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு சொல்லொணாத் துயரத்தை அளிக்கிறது. #SPBalasubramaniam அவர்கள் மறைந்தாலும் அவரது கானக்குரல் பாடல்கள் என்றுமே மறையாது ஒலித்துக் கொண்டே இருக்கும். அவரது பெருமைகளை நினைவூட்டிக் கொண்டே இருக்கும். #RIPSPB pic.twitter.com/jOgiwSsJCK
— O Panneerselvam (@OfficeOfOPS) September 25, 2020