கதைல ட்விஸ்ட்., தான் எப்போதும் வரமாட்டேன் என்று ரஜினி அறிவிக்கவில்லை – தமிழருவி மணியன்
தான் எப்போதுமே அரசியலில் அதுயெடுத்து வைக்க போவதில்லை என்று ரஜினி அறிவிக்கவில்லை என தமிழருவி மணியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து காந்தி மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காந்தி மக்கள் இயக்கத்தில் ரஜினி மக்கள் மன்றத்தை சார்ந்த பலர் இணைந்து பணியாற்ற என்னுடன் தொடர்பு கொள்கிறார்கள். ரஜினி ஒரு நாள் அரசியலலுக்கு வருவார், முதல்வர் பதவியில் அமர்வார் என்ற கனவில் நீங்கள் அவருடைய ரசிகர்களாக மாறவில்லை. அவருடைய இயல்பான நடிப்பு, அடக்கம், ஒளிவு மறைவின்றி உரைக்கும் நேர்மை, ஒவ்வொருவரிடமும் பழகும் உயர்குணம் ஆகியவற்றில் மக்கள் அனைவரும் அவருடைய ரசிகர்களாக மாறினர்கள்.
அவருக்காக எதையும் இழக்கம் துணியும் உங்கள் அர்ப்பணிப்பைக் கண்டு தான் நெஞ்சம் நெகிழ்திருக்கிறேன். பாழ்பட்ட அரசியலைப் பழுது பார்க்கவே ரஜினி அரசியல் உலகில் அடியெடுத்து வைக்க முயன்றார். காலச் சூழல் அவருடைய கனவை நனவாக்க இடம் தராத நிலையில், தற்போது அவர் கட்சி தொடங்குவதை தவிர்த்திருக்கிறார். தான் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்க போவதில்லை என்று ரஜினி அறிவிக்கவில்லை. ரஜினி மக்கள் மன்றத்தையும் கலைத்துவிடவில்லை. ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ஆள் பிடிக்கும் அநாகரிக அரசியலை நான் அடியோடு வெறுக்கிறேன்.
காந்தி மக்கள் இயக்கம் இந்த செயலில் மறந்தும் ஈடுபடாது என்று உறுதிபட அறிவிக்கிறேன். காந்தி மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்தின் சகோதர அமைப்பாக தொடர்ந்து செயல்படும். அவரவர் இருந்த இடத்தில் இருந்தபடி, கரங்கள் இணைந்து காரியமாற்றுவோம். தரம் தாழ்ந்து, தன்னலம் வாய்ந்த அரசியலை என்றும் நான் நடத்தவில்லை. ஆக்கபூர்வமான, அர்த்தமுள்ள பணிகளில் காந்தி மக்கள் இயக்கம் ஈடுபடும். மேலும், மார்ச் 7-ஆம் தேதி திருப்பூரில் பொதுக்குழு கூடவிருக்கிறது. நாளையே ரஜினி அரசியலுக்கு வந்தாலும், காந்தி மக்கள் இயக்கம் அவருடன் சேர்ந்தே பணியாற்றும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தான் எப்போதுமே அரசியலில் அதுயெடுத்து வைக்க போவதில்லை என்று ரஜினி அறிவிக்கவில்லை என தமிழருவி மணியன் அறிக்கை.!#tamilaruvimaniyan #Rajinikanth #RajiniMakkalMandram #tnpolitics pic.twitter.com/tJNXPQG9nz
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) February 2, 2021