தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான் – களமிறங்கிய ரஜினி

Default Image

ஜனவரியில் கட்சி துவங்கப்படும் என்றும் அதற்கான தேதி டிசம்பர் 31ல் அறிவிக்கப்படும் என நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக அறிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பலதரப்பட்ட கருத்துக்கள் கூறப்பட்டு வந்தது. இதனால் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் இரண்டு மூன்று முறை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இதையடுத்து ரஜினி அரசியக்கு வருவார், கட்சி தொடங்குவர் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கான முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எப்போ வரணுமோ அப்ப வருவேன் எனவும் ரஜினிகாந்த் கூறிருந்தார். மேலும் மக்களிடம் எழுச்சி வரும்போது அரசியலுக்கு வருவேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, சமீபத்தில் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் நேரடியாக கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனை முடிந்த பின் சென்னை போயாஸ் கார்டனில் உள்ள அவர் இல்லத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்பொழுது, நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் உங்க கூட இருப்போம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் அவர்களுடைய கருத்தை கூறினார்கள். நான் என்னுடைய கருத்தை கூறினேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் என்னுடைய முடிவை தெரிவிக்கிறேன் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜனவரியில் கட்சி துவங்கப்படும் என்றும் அதற்கான தேதி டிசம்பர் 31ல் அறிவிக்கப்படும் எனவும் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல என்று ஹேஸ்டேக்-வுடன் வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலில், மக்களிடையே பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதிமத சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சியம் என்றும் அதிசியம், அற்புதம் நிகழும் எனவும் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து, தற்போது சென்னை போயஸ் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கொடுத்த வாக்கில் இருந்து நான் என்றைக்கும் மாற மாட்டேன். தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செல்ல இருந்தேன். ஆனால் கொரோனா காரணமாக முடியவில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் சுற்றுப்பயணம் செய்வது ஆபத்து என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன்.

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. அரசியல் மாற்றம் தேவை, கட்டாயம் நிகழும். தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி. தோல்வியடைந்தால் அது மக்களின் தோல்வி. என் பாதையில் வெற்றி அடைவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி மற்றும் கட்சியின் மேற்பார்வையாளரை தமிழருவி மணியன் ஆகியோரை ரஜினிகாந்த் நியமித்துள்ளார். ரஜினியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அவரது ரசிகர்கள் இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வெடித்து  கொண்டாடி வருகின்றனர்.

ரஜினியின் அரசியல் அறிவிப்பை தொடர்ந்து மற்ற அரசியல் கட்சிகளின் அடுத்து மோவ் எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எது எப்படி இருந்தாலும் வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்