இன்று கோவையில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளச்சி ஜெயராமன் என முக்கிய அதிமுக பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், ஒரு கூட்டணிக்குள் இருந்து கொண்டு அந்த கூட்டணி கட்சியையே விமர்சித்து கருத்து கூற கூடாது. அம்மா (ஜெயலலிதா) பற்றி பேச யாருக்கும் தகுதியில்லை. அண்ணா பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். அவர் பற்றி பேச அவசியமா? பேரறிஞர் அண்ணா பற்றி பேசலாமா.?
பெரியார் பற்றி விமர்சித்து பேசியுள்ளார். அண்ணா ஆரம்பித்த திமுக தான் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. தமிழகத்தில் இருக்கும் பல்வேறு அரசியல் மாற்றத்திற்குள காரணம் அண்ணா தான். அவர் பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களை பொதுவெளியில் தவிர்த்து இருக்க வேண்டும்.
நாங்கள் எப்போதும் கொள்கையில் கூட்டணி (பாஜக – அதிமுக ) வைத்துக்கொண்டது கிடையாது. தேர்தலுக்காக கொள்கையை விட்டுக்கொடுக்க முடியாது. பாஜக ஆட்சியின் போது தான் காவேரி விவகாரம் தொடர்பாக 23 நாட்கள் அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கினார்கள். விவசாயிகளுக்காக இதனை செய்தோம். எங்கள் தலைவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி அம்மா (ஜெயலலிதா) அதற்கடுத்து எடப்படியார் தான். அவர் கிணற்றில் குதிக்க சொன்னால் கூட நாங்கள் குதித்து விடுவோம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…