தீவிர மழைக்காலத்திலும் தங்குதடையின்றி பால் விநியோகம் – ஆவின் நிர்வாகம் அறிக்கை!

சென்னையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (அக்டோபர் 15) சுமார் 16 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகியுள்ளது என ஆவின் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

AavinMilk

சென்னை : வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததை தொடர்ந்து, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து பல இடங்களில் நீர் தேங்கியது. இதன் காரணமாக, மக்களுடைய இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. தேங்கி இருக்கும் மழை நீரை அகற்ற தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதைப்போல, மக்கள் அதிகமாக வாங்க கடைக்கு செல்லும் பால் தடையின்றி கிடைக்க ஆவின் நிறுவனமும் கடந்த இரண்டு நாட்களாக, மழையால் பால் விநியோகத்தில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் இருக்க, ஆவின் நிறுவனம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றையும் ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் ” பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம், 201 க்கும் மேற்பட்ட ஒப்பந்த வாகனங்கள் மூலம் பால் விநியோகமும், 31 ஒப்பந்த வாகனங்கள் மூலம் அனைத்து பால்பொருட்களும் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், தேவைக்கேற்ப பிற மாவட்டங்களிலிருந்து தேவையான பால், பால் பவுடர் மற்றும் பால் பாக்கெட்டுகள் கொண்டு வந்துள்ளது.

ஆவின் நிறுவனம் தினமும் 14.50 இலட்சம் லிட்டர் பால் விற்பனை செய்துவரும் நிலையில், நேற்று கடும் மழை பெய்த போதிலும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்களின் தேவைக்கேற்ப, ஆவின் நிறுவனம் தங்களது விநியோகத்தை அதிகரித்து, 16 இலட்சம் லிட்டர் பால் விற்பனை செய்ததுள்ளது. இது, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆவின் நிறுவனம் எல்லாக் காலக்கட்டத்திலும் பொதுமக்கள் நலன் மற்றும் அவர்களின் விருப்பத்தை அறிந்து செயல்பட்டு வருகிறது. எனவே மக்களின் தேவைக்கேற்ப அனைத்து ஆவின் பால் வகைகளும் எவ்வித தங்குதடையுமின்றி விநியோகம் செய்யப்படுகிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம்” என அறிக்கையில் ஆவின் நிறுவனம் கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்