விளக்கம் கூறியும் ஆளுநருக்கு புரியவில்லை – கனிமொழி எம்.பி
ஆளுநர் மூலம் ஆட்சியை முடக்க முயற்சி செய்கிறார்கள் என கனிமொழி எம்.பி பேச்சு.
சென்னை திண்டிவனத்தில் கனிமொழி எம்பி அவர்கள் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் பாஜகவால் ஆட்சியைப் பிடிக்க முடியாத காரணத்தினால் மாநிலங்களில் ஆளுநர் மூலம் ஆட்சியை முடக்க முயற்சி செய்கிறார்கள். தமிழக ஆளுநர் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்டத்திற்கு ஒப்புதல் தர மறுக்கிறார்.
இந்த விவகாரத்தில் சட்டத்துறை அமைச்சர் ஆளுநரிடம் பலமுறை விளக்கம் அளித்தும் அவர் புரிந்து கொள்ளவில்லை. மாநில அரசுகள் மக்களுக்கு எந்த நன்மையும் செய்து விடக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக தான் இவர்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளனர் என விமர்சித்துள்ளார்.