கூவம் கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி.! மாணவர்களின் படிப்பு பாதிப்பு.!
- சென்னை அண்ணாசாலையில் கூவம் கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
- கோடை விடுமுறையில் செய்யாமல் இப்ப வெளியேற்றுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினரிடம் அப்பகுதி மக்கள் புகார்.
சென்னை அண்ணாசாலை தொடக்கத்தில் அமைந்துள்ள காந்தி நகரில் ஆறுகள் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் கூவம் கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அங்குள்ள 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரும்பாக்கத்தில் இடமாற்றம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கோடை விடுமுறையில் வேறு இடத்தில் குடியமர்த்தாமல், தற்போது தங்களை வெளியேற்றுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினரிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவர்கள் நலன் கருதி சிறப்பு பேருந்து, பள்ளி இடமாறுதல் வசதி உள்ளிட்டவைகளை செய்துத்தர நடவடிக்கை எடுப்பதாக உயர் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.