மத்திய அரசு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது.. காரணங்களை அடுக்கிய தமிழக அமைச்சர்.!

Default Image

சுங்க கட்டணம் மூலம் சாலைகள் மேம்படுத்தப்படாத காரணத்தால் பொதுமக்கள் இடையே போராட்டங்களும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளது. ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் சுங்க கட்டணத்திலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். என தமிழக அமைச்சர் ஏ.வ.வேலு மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினார்.  

நேற்று கர்நாடக, பெங்களூரில் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரின் அவர்கள் தலைமையில் அனைத்து மாநிலத்தின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட மாநாடு நடைபெற்றது. தமிழகத்தின் சார்பில் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கலந்து கொண்டார். அப்போது அவர் மத்திய அரசுக்கு பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தார்.

சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயில் வரையில் இரண்டு அடுக்கு உயர்மட்ட மேம்பால சாலைக்கு கடந்த மே மாதமே பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சுமார் 64,000 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை பராமரித்து வருகிறது. தமிழக சாலைகளை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முக்கியமாக மாவட்டம் மற்றும் தாலுகா தலைமை செயலகங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகள் 2026 ஆம் ஆண்டுக்குள் முடிக்க அரசு திட்டம் போட்டுள்ளது.

மேற்கண்ட திட்டத்தின் கீழ் சுமார் 2200 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாகவும், 6,800 கிலோமீட்டர் நீளத்திற்கு 2 வழிச்சாலையாகவும் சாலை விரிவுபடுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் தற்போது உள்ள 1280 தரை மேம்பாலங்கள் 2026 ஆம் ஆண்டுக்குள் உயர்மட்ட மேம்பாலங்களாக மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போக்குவரத்து நெரிசலை குறைக்க அனைத்து நகராட்சிகளிலும் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சாலை பாதுகாப்பு செயலாக்கத்திற்கு என சிறப்பு பணி குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் பணிகள் விரிவாக நடைபெற்று வருகிறது. விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்க சிறப்பு பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டு சுமார் 335 பொறியாளர்கள் அதில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

சென்னை மற்றும் கன்னியாகுமரி இடையே உள்ள சாலையை எட்டு மற்றும் ஆறு வழிச்சாலையாக மேம்படுத்துவது முக்கியமான தேவையாக இருக்கிறது. மாமல்லபுரம் கோவில், தஞ்சாவூர் பெரிய கோவில் ஆகிய இரண்டும் உலக பாரம்பரிய தளங்களாக உள்ளன. இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அந்த முக்கியமான தலங்களை தேசிய நெடுஞ்சாலைகளோடு இணைப்பதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்.

சுங்க கட்டணம் மூலம் இந்திய அரசாங்கத்தின் நிதியை பயன்படுத்தி இருவழி சாலையாக மேம்படுத்தப்படுகின்ற நிலையை கணிசமாக மேம்படுத்தப்படாத காரணத்தால் பொதுமக்கள் இடையே போராட்டங்களும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளது. ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் சுங்க கட்டணத்திலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்.’ என்று அந்த கூட்டத்தில் ஒன்றிய அமைச்சருக்கு எடுத்துரைத்தார் தமிழக அமைச்சர் ஏ.வ.வேலு.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்