கனமழை எதிரொலி – ஊட்டி மலை ரயில் 3 நாட்களுக்கு ரத்து !
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக ஊட்டி மலை ரயில் அடுத்த 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோரம் இருக்கும் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு பலத்த மலையானது பெய்துள்ளது. பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு ஊட்டி மலை பகுதிக்கு செல்லும் மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.