டெல்லியில் உள்ள மக்களவை ,மாநிலவை ஆகிய அவையிலும் குளிர்கால கூட்டு தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மக்களவையில் பேசிய வைகோ , உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பவர்கள் அவர்கள் வழக்கில் வழக்கு நிறைவு பெறவில்லை என்றாலும் , தீர்ப்பு தவறு என கருதினாலும் அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் .
ஆனால் தென்னிந்திய மக்கள் உச்சநீதிமன்றத்தை எளிதில் நாட முடியவில்லை காரணம் நெடுந்தூர பயணம் , வழக்கறிஞர்கள் கட்டணம் , பயணத்தில் வீணாகும் செலவு போன்ற காரணங்களால் ஏழை-எளிய அடித்தள மக்கள் உச்ச நீதிமன்றத்திடம் இருந்து நீதியை பெற முடியவில்லை.
உச்சநீதிமன்றதில் மேல்முறையிடு வழக்குகள் வட இந்தியாவிற்கு அடுத்ததாக தென்னிந்தியாவில் தான் அதிக வழக்குகள் வருகின்றனர் எனவே உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர கிளையை தென்னிந்தியாவில் நிறுவினால் மட்டுமே ஏழை எளிய மக்கள் எளிதாக நீதிமன்றத்தை அணுக முடியும் வழக்கறிஞர்களுக்கும் வசதியாக இருக்கும் என கூறினார்.
இந்திய அரசியல் சட்டப் பிரிவு 21 எல்லோருக்கும் பொது நிதி கிடைத்தது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக உள்ளது. 2018 மே 4-ம் தேதி கணக்கின்படி உச்சநீதிமன்றத்தில் 54,013 வழக்குகள் தீர்ப்பை நோக்கி உள்ளன.
எப்படி இத்தனை பிரச்சினைகளை தீர்க்க முடியும்?. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை மேற்கொண்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற வேண்டும் .அரசியல் சட்டத்தின் 130 வது பிரிவு அதிகாரத்தின் படி உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ,யாரையும் கலந்து பேச வேண்டியதில்லை , கருத்துக்களை கேட்க வேண்டியதில்லை ,அவர் தாமாகவே முடிவு எடுத்து செயல்படலாம்.
ஆனால் அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற வேண்டும் எனவே உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் நிறுவ வேண்டும் என தெரிவித்தார்.
மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்…
இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…
காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…