சென்னையில் உச்சநீதிமன்ற கிளையை அமைக்கவேண்டும்- வைகோ வேண்டுகோள்..!

Default Image

டெல்லியில் உள்ள மக்களவை ,மாநிலவை ஆகிய அவையிலும் குளிர்கால கூட்டு தொடர் நடைபெற்று வருகிறது.  இன்று மக்களவையில் பேசிய வைகோ , உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பவர்கள் அவர்கள் வழக்கில் வழக்கு நிறைவு பெறவில்லை என்றாலும் , தீர்ப்பு தவறு என கருதினாலும் அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் .
ஆனால் தென்னிந்திய மக்கள் உச்சநீதிமன்றத்தை எளிதில் நாட முடியவில்லை காரணம் நெடுந்தூர பயணம் ,  வழக்கறிஞர்கள் கட்டணம் , பயணத்தில் வீணாகும் செலவு போன்ற காரணங்களால் ஏழை-எளிய அடித்தள மக்கள் உச்ச நீதிமன்றத்திடம் இருந்து  நீதியை பெற முடியவில்லை.
உச்சநீதிமன்றதில் மேல்முறையிடு வழக்குகள் வட இந்தியாவிற்கு அடுத்ததாக தென்னிந்தியாவில் தான் அதிக வழக்குகள் வருகின்றனர் எனவே உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர கிளையை தென்னிந்தியாவில் நிறுவினால் மட்டுமே ஏழை எளிய மக்கள் எளிதாக நீதிமன்றத்தை அணுக முடியும் வழக்கறிஞர்களுக்கும் வசதியாக இருக்கும் என கூறினார்.
இந்திய அரசியல் சட்டப் பிரிவு 21 எல்லோருக்கும் பொது நிதி கிடைத்தது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக உள்ளது. 2018 மே 4-ம் தேதி கணக்கின்படி உச்சநீதிமன்றத்தில் 54,013 வழக்குகள் தீர்ப்பை நோக்கி உள்ளன.
எப்படி இத்தனை பிரச்சினைகளை  தீர்க்க முடியும்?.  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை மேற்கொண்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற வேண்டும் .அரசியல் சட்டத்தின் 130 வது பிரிவு அதிகாரத்தின் படி உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ,யாரையும்  கலந்து பேச வேண்டியதில்லை , கருத்துக்களை கேட்க வேண்டியதில்லை ,அவர் தாமாகவே முடிவு எடுத்து செயல்படலாம்.
ஆனால் அதற்கு குடியரசுத் தலைவர்  ஒப்புதல் பெற வேண்டும் எனவே உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் நிறுவ வேண்டும் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்