இன்று மற்றும் நாளை டோக்கன் வழங்கப்படுகிறது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதனால், ஏப்ரல், மே மாதங்களில் தமிழக ரேஷன் கடைகளில் கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.அந்த வகையில், அடுத்து மே மாதம் வழங்கப்படும் இலவச பொருட்களுக்கு கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க இன்று மற்றும் நாளை வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம்பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி உள்ளிட்டவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மற்றும் நாளை டோக்கன் வழங்கப்படுகிறது .டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் மே 4 முதல் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ரேஷன் கடைக்கு வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
ஆந்திரப்பிரதேசம் : தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரனும் இப்பொது தெலுங்கு திரையுலகில்…
சேலம் : ஆத்தூரில் இருந்து வானவரம் மலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து…