எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து மாணவர்கள் இரண்டு தற்கொலை சம்பவங்களால் பதட்டம் நிலவி உள்ளது. செங்கல்பட்டு அடுத்த பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சார்ந்த அனுஷ் செளத்ரி என்ற மாணவன் ஈ.சி.ஈ பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் விடுதியில் தங்கி படித்து வந்த அனுஷ் செளத்ரி இன்று காலை 2 வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்து அங்கு வந்த மறைமலைநகர் காவல்துறை அனுஷ் செளத்ரி அவரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மறைமலைநகர் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது .மேலும் நேற்று இது போன்று பொன்னேரி பகுதியை சேர்ந்த அனுப்பிரியா. அவர் பிடெக் 3ஆம் ஆண்டு படித்து வந்தார்.இவர் கல்லூரின் 10 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தொடர்ந்து எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் அடுத்தடுத்து இரண்டு தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளதால் கல்லூரியில் பதட்டம் நிலவி உள்ளது.மேலும் மறைமலைநகர் காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…