மதிப்பெண்களில் தவறு.. 60 நாட்களுக்கு பிறகு OMR sheet – TNPSC முக்கிய அறிவிப்பு…
மதிப்பெண்களின் தவறு இருக்கும் பட்சத்தில் அவருக்கு புதிய பணியிடம் உருவாக்கப்பட்டு பணி வழங்கப்படும் என அறிவிப்பு.
சமீபத்தில் வெளியான Group 4 தேர்வு முடிவுகளில் மதிப்பெண்களில் தவறு இருந்தால் 60 நாட்களுக்கு பிறகு OMR sheet ஐ பெற்று கொள்ளலாம் என (TNPSC) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதில் தவறு இருக்கும் பட்சத்தில் அவருக்கு புதிய பணியிடம் உருவாக்கப்பட்டு பணி வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
அண்மையில் குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியிடப்பட்டன. அந்தத் தேர்வு முடிவுகளில், ஒரே நிறுவனத்தில் பயின்ற 2,000 பேர் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சிப் பெற்றுள்ளதாகவும், இதேபோல நில அளவர் பணிக்கான தேர்விலும் ஒரே மையத்தில் கிட்டத்தட்ட 700 பேர் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சிப் பெற்றுள்ளதாகவும், இதில் முறைகேடுகள் நடைபெற்றிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து நேற்று சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்திருந்தார். மேலும், குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என அரசியல் தலைவர்கல் பலர் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். இந்த நிலையில், மதிப்பெண்களில் தவறு இருந்தால் 60 நாட்களுக்கு பிறகு OMR sheet ஐ பெற்று கொள்ளலாம் என TNPSC அறிவித்துள்ளது.