ஈரோடு : நாதக பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம்..திமுக வேட்பாளர் சந்திரகுமார் பேச்சு!

நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம் என ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் திமுக வேட்பாளர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

V. C. Chandhirakumar

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி, 43,887 வாக்குகள் வித்தியாசத்தில் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளது.

இதனையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முன்னிலை பெற்றுள்ளதையடுத்து, தொண்டர்கள் கொண்டாட தொடங்கி விட்டார்கள்.  தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், திமுக வேட்பாளர் சந்திரகுமார் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தபோது நாதக பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம் என பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” இந்த தேர்தலின் வெற்றிக்கு முழுமையான காரணம் அண்ணன் தளபதி ஸ்டாலின் தான். மக்களுக்காக நல்லது செய்யவேண்டும் என்பதற்காக தான் போட்டியிட்டேன். இந்த தேர்தலில் கிடைத்த வெற்றி தான் திமுகவுக்கு அடுத்ததாக நடைபெறவுள்ள தேர்தல்களிலும் நடக்கும். பிரதான எதிர்க்கட்சி இந்த முறை தேர்தலில் நிற்கவில்லை. ஓட்டுப்போட போபவர்களிடம் ஒட்டு போடாதீர்கள் அப்படி இல்லை என்றால் நோட்டாவுக்கு ஓட்டு போடுங்கள் என கூறினார்கள்.

அதற்காக தான் இப்போது நோட்டாவுக்கும் அதிகமான வாக்குகள் விழுந்துகொண்டு இருக்கிறது” எனவும் கூறினார். அதனைத்தொடர்ந்து, பேசிய அவர் ” என்னை பொறுத்தவரை நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம். எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர்.  (நா.த.க) தோல்வியை அடிப்படையாகக் கொண்டு ஜனநாயகம் இல்லை என கூறுவது நியாயமற்றது. தவறான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சிகள் போட்டியிடவில்லை.

அவர்கள் போட்டியிடாத சூழலில், நாம் தமிழர் கட்சி மட்டுமே தேர்தலில் ஈடுபட்டது. இதற்கு முன்பாகவும் பல இடைத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் மிகக் குறைவாகவே உள்ளன. மேலும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலரும் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். மக்கள் திராவிட மாடல் ஆட்சியை விரும்புகிறார்கள் என்பதற்குச் இந்த தேர்தல் முடிவுகள் ஒரு எடுத்துக்காட்டு” எனவும் வி.சி.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen
narendra modi HAPPY
V. C. Chandhirakumar
Parvesh verma - Arvind Kejriwal