வேலை இல்லாமல் வறுமையில் வாடுவதால் சிறையில் மூன்று வேலை உணவு கிடைக்கும் என வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஈரோடு ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த சனிக்கிழமை காலை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு ஈரோடு ரயில் மற்றும் பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
வெடிகுண்டு மிரட்டல்
இதனை அடுத்து ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து ஈரோடு ரயில் நிலையம் பின் மோப்பநாய் உதவியுடன் பரிசோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் எதுவும் சிக்காததால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரிய வந்தது. அதேபோல ஈரோடு பேருந்து நிலையத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கும் எந்த சந்தேகத்துக்கிடமான எந்த பொருளும் சிக்காத நிலையில் அதுவும் புரளி என்று அறியப்பட்டது.
இதனையடுத்து இதுபோன்று வெடிகுண்டு வைத்ததாக புரளி கிளப்பிய மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணை மேற்கொண்டதில் பொய்யாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டார்.
சிறையில் மூன்று வேலை உணவு கிடைக்கும் என்பதால் மிரட்டல்
சந்தோஷ் குமார் விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் பொய்யானது என்றும், வேலை இல்லாமல் வறுமையில் வாடுவதால் சிறையில் மூன்று வேலை உணவு கிடைக்கும் என்பதால் இது போன்ற செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…