ஈரோடு – வேட்பாளர்களுக்கான ஆய்வு கூட்டம்!
ஈரோடு மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் வேட்பாளர்களுக்கான ஆய்வு கூட்டம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஈரோடு மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் வேட்பாளர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலரும், ஈரோடு மாநகர்ச்சி ஆணையருமான சிவகுமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு கூட்டத்தில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி, தேர்தல் மேலிட பார்வையாளர் பங்கேற்று தேர்தல் விதிகள் குறித்து வேட்பாளர்களுக்கு எடுத்துரைத்தனர்.
இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடங்கியது. ஈரோடு ஆட்சியர் கிருஷ்ணனுன்னி தலைமையில், பெல் நிறுவன அதிகாரிகள் வாக்கு இயந்திரங்களை சரிப்பாகின்றனர். இதுபோன்று, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் வாக்கு இயந்திரங்கள் சரிபார்ப்பில் பங்கேற்றனர். தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியான நிலையில், கூடுதல் வாக்கு இயந்திரங்கள் தேவைப்படுமா ஆய்வு செய்யப்பட்டது.