விரைவில் ஈரோடு அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் – முதலமைச்சர் பழனிசாமி
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை விரைவில் தரம் உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி ஈரோடு மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.ஈரோட்டில் ரூ.53.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி. ரூ.97.85 கோடி மதிப்பிலான 15க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி.கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் அவர் பேசுகையில், கால்வாய்களை புனரமைப்பதற்கான நீண்டகால திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. வேளாண்துறைக்கு தண்ணீர் முக்கியம் என்பதால் அதை சேமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை விரைவில் தரம் உயர்த்தப்படும்.ரோடு மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடுதல் மேம்பாலங்கள் கட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. குண்டாறு வழித்தடத்திலும் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பவானி சாகர் ஆற்றில் சுமார் 7 இடங்களில் தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.