ஈரோடு கிழக்கு தேர்தல் – இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு..!

Default Image

ஈரோடு கிழக்கு இடைதேர்தல் நடைபெற உள்ள நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை  வெளியிடப்படுகிறது. 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக மறைந்ததையடுத்து, காலியாக உள்ள அந்த  தொகுதிக்கு வரும் பிப்-27 இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி-31ஆம் தேதி தொடங்கி கடந்த 7-ஆம் தேதி  நிறைவடைந்தது. இதனையடுத்து, இதுவரை சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 121 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இறுதி வேட்பாளர் பட்டியல் 

Pune by-election

இந்த நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற மனுக்களின் மீதான பரிசீலனையின் முடிவில் 41 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 80 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதனையடுத்து, இன்று பிற்பகல் 3 மணிவரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம். அதன்பின்னர், இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை  வெளியிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்