ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் தற்போதைய நிலவரம்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 59.28% வாக்குகள் பதிவு.
இடைத்தேர்தல் – வாக்குப்பதிவு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் அதிமுக, திமுக இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டாலும், பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு நிலவரம்:
அதுமட்டுமில்லாமல், திமுகவினர் மீது அதிமுக பல்வேறு புகார்களை அளித்துள்ளது. மறுபக்கம், மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 59.28% வாக்குகள் பதிவாகியுள்ளன.
பெண்கள் கூட்டம்:
2.27 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் கடந்த 8 மணி நேரத்தில் 1,34,758 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில்,65,350 ஆண்கள், 69,400 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8 பேர் வாக்களித்துள்ளனர். பிற்பகல் 3 மணி நிலவரப்படி ஆண்களைவிட 4,000 பெண்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள் கூட்டம் கூட்டமாக வாக்களித்து வருகின்றனர்.