ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா போட்டியிடுவார் என நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு.
திருமகன் ஈவேரா மறைவையடுத்து, வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு பிரதான கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். மேலும் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், நாம் தமிழர் கட்சி சார்பில் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள சீமான் அவர்கள், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா போட்டியிடுவார். மொழி பற்று, இனப்பற்று கொண்டவர். அதனால் தான் இந்த வாய்ப்பை இவருக்கு வழங்கியுள்ளோம்.
எங்களுக்கு எங்களுடைய பலம் என்ன என்று தெரியும் அந்த வகையில் இவர் கடுமையான உழைப்பை கொண்டவர் என தெரிவித்துள்ளார். இவர் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், இத்தொகுதியில் நாதக வேட்பாளர் 11,629 வாக்குகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…