ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – வாசனுடன் பன்னீர் செல்வம் சந்திப்பு…!
ஓபிஎஸ் தரப்பு சென்னையில் உள்ள தமாக தலைவர் வாசன் இல்லத்தில் சந்தித்து இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை
வரும் பிப்.27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு சென்னையில் உள்ள தமாக தலைவர் வாசன் இல்லத்தில் சந்தித்து இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டு உள்ளனர். இந்த சந்திப்பின் போது, ஓபிஎஸ் தலைமையில் வைத்திலிங்கம், கிருஷ்ணன், பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.