ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – வீடுவீடாக சென்று பிரச்சாரம் செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து வீடு வீடாகச் சென்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிரசாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், பிரதான கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.
அந்த வகையில், பிரதான கட்சியின் முதல் வேட்பாளராக திமுக கூட்டணி சார்பில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா அவர்களின் தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான இவிகேஎஸ்.இளங்கோவன் திமுக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து வீடு வீடாகச் சென்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.