ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – நாளை மறுநாள் ஜிகே வாசன் பிரச்சாரம்..!
அதிமுகவுக்கு ஆதரவாக ஜி.கே.வாசன் ஈரோட்டில் நாளை மறுநாள் பிரச்சாரம்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக மறைந்ததையடுத்து, காலியாக உள்ள அந்த தொகுதிக்கு வரும் பிப்-27 இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இடைதேர்த்லில், 77 வேட்பாளர்கள் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். தேர்தலில் காங்கிரஸ்,அதிமுக, தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. இதனையடுத்து, தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள், அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருந்த நிலையில், ஈரோட்டில் நாளை மறுநாள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.