இன்று ஈபிஎஸ் தரப்பில் இன்று வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதான அரசியல் கட்சியினர் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு பிரதான கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ், தேமுதிக, அமமுக மற்றும் நாம் தமிழர் போன்ற கட்சிகள் வேட்பாளரை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், அதிமுகவை பொறுத்தவரையில், ஈபிஎஸ் – ஓபிஎஸ் என இருதரப்பாக செயல்பட்டு வரும் நிலையில், இதுவரை இருதரப்பிலும் வேட்பாளர் குறித்த எந்த அறிவிப்பும்வெளியாகவில்லை.
இதற்கிடையில், நேற்று ஈரோட்டில் அதிமுக பணிக்குழுவுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய செங்கோட்டையன், இன்று காலை தேர்தல் பணிமனை திறக்கப்படும் என்று அதன்பின் மகிழ்ச்சியான செய்தி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார். செங்கோட்டையனின் இந்த அறிவிப்பால் இன்று ஈபிஎஸ் தரப்பில் இன்று வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…