ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; வேட்பாளர் இறுதிப்பட்டியல் நாளை வெளியீடு.!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை மாலை வெளியிடப்படுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்-27 இல் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி-31ஆம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக மறைந்ததையொட்டி அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த இடைத்தேர்தலுக்காக இதுவரை சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 121 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர், இதில் நேற்று நடைபெற்ற மனுக்களின் மீதான பரிசீலனையின் முடிவில் 41 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 80 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தேர்தல் நாள் நெருங்க நெருங்க அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளரின் சார்பில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். நாளை பிற்பகல் 3 மணிவரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம், அதன்பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை மாலை அறிவிக்கப்படுகிறது.