ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளருக்கு SDPI கட்சி ஆதரவு!

Default Image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு SDPI கட்சி ஆதரவு.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. காலமானதை அடுத்து, அத்தொகுதியில் வரும் பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.

வேட்பு மனு தாக்கல் நாளை முதல் தொடங்க உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதற்காக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தங்களது ஆதரவு அளித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எஸ்.டி.பி.ஐ ஆதரவு அளித்துள்ளது. தனித்து போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு அளிப்பதாக எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அறிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்