ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – பழனிசாமி ஆலோசனை..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
வரும் 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இதற்காக முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் பணிகளில் முனைப்பு காட்டி வருகின்றனர். அந்த வகையில், ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து அதிமுக சார்பில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.