ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – திமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை..!
2 ஆண்டுகளுக்குள் தந்தையே மிஞ்சிய மகன் என்று மு.க.ஸ்டாலின் பெயர் பெற்றுள்ளார் என அமைச்சர் துரைமுருகன் பேச்சு.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக மறைந்ததையடுத்து, அந்த தொகுதிக்கு வரும் பிப்-27 இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு கட்சியினரும், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக திமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், தமிழை உயர்த்திப் பிடித்த பேனா; எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்டோரை உருவாக்கியது கலைஞரின் பேனா. 2 ஆண்டுகளுக்குள் தந்தையே மிஞ்சிய மகன் என்று மு.க.ஸ்டாலின் பெயர் பெற்றுள்ளார் என தெரிவித்துள்ளார்.