ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – நல்லதே நடக்கும் என நம்புகிறேன் : வாசன்
ஈரோடு கிழக்கில் அதிமுக வேட்பாளர் இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெறுவார்
பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என்றும், அதிமுக போட்டியிட உள்ளதாகவும் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அதிமுக வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்த ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நல்லதே நடக்கும். இடைத்தேர்தலில் வெற்றி பெற கூட்டணி சார்பில் வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கில் அதிமுக வேட்பாளர் இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என தெரிவித்துள்ளார்.