ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – எடப்பாடி தரப்பு ஆலோசனை..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பழனிசாமி அவர்கள் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் அதிமுகவை பொருத்தவரையில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவருமே இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பழனிசாமி அவர்கள் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, ராஜேந்திர பாலாஜி, அன்பழகன், ராஜு, ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இந்த கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.