ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – அதிமுக வேட்பாளரை ஆதரித்து செல்லூர் ராஜு வாக்கு சேகரிப்பு..!
அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரிப்பு.
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை மறுநாள் இடைதேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து, தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. அனைத்து கட்சியினரும் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தை இன்று மாலை 5 மணிக்குள் முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், கடைசி நாளான இன்று வாக்கு சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
செல்லூர் ராஜு வாக்கு சேகரிப்பு
இந்த நிலையில், அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஈரோடு பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.