ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.. 4 முனை போட்டியில் தேர்தல் களம்!

Default Image

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த அனல்பறக்கும் பரப்புரை 6 மணியுடன் ஓய்ந்தது.

பிரச்சாரம் ஓய்வு:

ELECTIONSPEECH

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த அனல்பறக்கும் பரப்புரை 6 மணியுடன் ஓய்ந்தது. தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து முக்குதலமைச்சர் முக ஸ்டாலின் தீவிர பரப்புரை மேற்கொண்டார்.

கடைசி நாளில் கட்சி தலைவர்கள்:

campaigndone

அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமியும், நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து சீமானும் கடைசி நாளில் பிரச்சாரம் மேற்கொண்டனர். தேமுதிக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சி தலைவர்களும் கடைசி நாளில் வீதி வீதியாக வாக்கு சேகரித்தனர். பிரச்சாரம் முடிந்ததை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து வெளியூரை சேர்ந்தவர்கள் வெளியேறுகின்றனர்.

இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு:

ERODEELECTION27

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்ததை அடுத்து வாக்கு பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கடைசி நேரத்தில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க பறக்கும் படை எண்ணிக்கை 10ஆக அதிகரிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

நான்கு முனை போட்டி:

ERODEBYPARTIES

இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. அதன்படி, திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்