ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – 27.89% வாக்குகள் பதிவு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 11 மணி வரை 27.89 சதவீத வாக்குகள் பதிவு.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.10% வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 11 மணி வரை 27.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. ஈரோடு கிழக்கில் 2.27 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் கடந்த 4 மணிநேரத்தில் 63,469 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 32,562 ஆண் வாக்காளர்களும், 30,907 பெண் வாக்காளர்களும் இதுவரை வாக்களித்துள்ளனர். 238 வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றன.