ஈரோடு இடைத்தேர்தல்! யார் யாருக்கு எந்தெந்த சின்னங்கள்! முழு விவரம் உள்ளே…

Default Image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யார் யாருக்கு எந்தெந்த சின்னங்கள் என்பதை பார்க்கலாம்.

ஈரோடு இடடைத்தேர்தல்: 

ERODEELECTION27

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவேரா மறைவுக்கு பிறகு, அத்தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் போட்டிபோட்டு களமிறங்கியுள்ள பிரதான அரசியல் கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து, வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்தனர். இதில், திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுகவில் இபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு, தேமுதிகவில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.

வேட்புமனுக்கள் ஏற்பு: 

candidatelist

இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 121 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனுக்களின் மீதான பரிசீலனையின் முடிவில் மொத்தமாக 121 வேட்புமனுக்களில் 41 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 83 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில், அமமுக உள்ளிட்ட 6 வேட்பாளர்கள், வேட்புமனுக்களை திரும்ப பெற்ற நிலையில், 77 வேட்பாளர்கள் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு:

symbollerode

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கான சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்றது. அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்து தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்திருந்தார். அதன்படி, அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் . இளங்கோவனுக்கு கை சின்னம், தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது.

குலுக்கல் முறையில் சின்னம் தேர்வு:

kulukkalmurai

ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஒரே சின்னத்தை கோரியதால் குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்தவகையில், குக்கர் சின்னத்தை 4 வேட்பாளர்கள் கோரியதால் குலுக்கல் முறையில் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, குலுக்கல் முறையில் கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி வேட்பாளர் கே.பி.எம்.ராஜாவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. குலுக்கல் முறையில் சின்னம் தேர்வு செய்ய நாம் தமிழர் கட்சி முகவர் எதிர்ப்பு தெரிவித்ததால், குலுக்கல் முறை இன்றி அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுயேச்சைகளுக்கான சின்னம் பட்டியல்:

symbolserodeec

குக்கர் சின்னம் இல்லாததால் அமமுக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்திருந்தது. இதுபோன்று மக்கள் நீதி மய்யமும் போட்டியிடவில்லை. இதனால், டார்ச் லைட், குக்கர் சின்னங்கள் சுயேச்சைகளுக்கான சின்னம் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதன்படி, குலுக்கல் முறையில், விஸ்வபாரத் மக்கள் கட்சி வேட்பாளர் வேலுமணிக்கு டார்ச் லைட் சின்னமும், கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி வேட்பாளர் கே.பி.எம்.ராஜாவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்