வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கியது.
பெயர், சின்னம் பொருத்தும் பணி:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. மறுபக்கம், தேர்தல் பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அந்தவகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்களின் பெயர், சின்னத்தை வாக்கு இயந்திரத்தில் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடக்கிறது.
சின்னம் ஒதுக்கீடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த மாதம் 31ம் தேதி முதல் 7ம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது. இதன்பின் 8-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனையும், 10-ம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா மற்றும் சுயேட்சைகள் உள்பட 77 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
வாக்குப்பதிவு எந்திரங்களும் தயார்:
இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர், சின்னம் வாக்குச்சாவடி முன்பு ஒட்டும் வேட்பாளர்கள் போட்டோ முகவரி அடங்கிய போஸ்டர்கள் அனைத்தும் மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…
ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…