ஈரோடு இடைத்தேர்தல் – கள நிலவரம் குறித்த ஆய்வு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்த கள ஆய்வு மேற்கொண்ட லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஒருபக்கம் அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட பிரதான கட்சிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், அதிமுக, திமுகவின் போட்டிபோட்டு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மறுபக்கம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் கள நிலவரம் குறித்து லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதன்பின் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்கள், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இடையே மட்டுமே போட்டி நிலவுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பணம், பிரியாணி, மதுபானம் விநியோகம் நடைபெறுவதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. பிப்ரவரி 7ம் தேதியில் இருந்து பிப்ரவரி 12ம் தேதி வரை தேர்தல் களம் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.