ஈரோடு இடைத்தேர்தல் நிலவரம் : அதிமுக பொதுக்குழு கடிதம் மதியம் 3மணிக்கு தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு.!

Published by
மணிகண்டன்

ஈரோடு இடைத்தேர்தலில் இபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு போட்டியிட அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த ஆதரவு கடிதம் மதியம் 3மணிக்கு தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில்முருகனும் அறிவிக்கப்பட்டனர். இதில், இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிடுவது என்ற குழப்பம் தொடர்ந்து வந்த நிலையில், உச்சநீதிமன்றம் வாய் வழக்கு சென்றது.

அதில், இபிஎஸ் – ஒ.பி.எஸ் என தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளரை முடிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களால் எடுக்கப்படும் முடிவு அவைத்தலைவரால் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும் என அறிவித்திருந்தது.

இதனையடுத்து, சில தினங்களுக்கு முன் சென்னை ராயப்பேட்டையில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை  கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தென்னரசு ஈரோடு கிழக்கு தேர்தலில் போட்டியிடுவார் என்றும், இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடுகான ஏ,பி உள்ளிட்ட படிவங்களில் கையெழுத்திட தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரம் அளிக்கப்படுவதாகவும், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவும் பொதுக்குழு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் டெல்லி புறப்பட்டனர். இந்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த வேட்பாளர் ஒப்புதல் படிவங்கள் இன்று பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கபட உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!  

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

14 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

15 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

18 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

18 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

19 hours ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

2 days ago