ஈரோடு இடைத்தேர்தல் – வாகன தணிக்கையில் ரூ.1.15 லட்சம் பறிமுதல்!
இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் நடத்திய வாகன தணிக்கையில் ரூ.1.15 லட்சம் பறிமுதல்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து அத்தொகுதியில் ருகிற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ், அ.தி.மு.க., ஓ.பி.எஸ் அணி, இ.பி.எஸ் அணி, தே.மு.தி.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி என முக்கிய கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் அதிமுகவில் மட்டும் குழப்பம் நீடித்து வருகிறது.
இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31ம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மறுபக்கம் தேர்தல் பணி தீவிரமடைந்து வருகிறது. பணப்பட்டுவாடா நடக்க கூடாது என்று ஈரோட்டில் பல பகுதிகளில் வாகன தணிக்கை நடந்து வருகிறது.
இந்த நடவடிக்கையில் பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் நடத்திய வாகன தணிக்கையில் ரூ.1.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எலெட்ரிக் கடை நடத்தி வரும் தேவகுமார் என்பவர் உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.1.15 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேவகுமாரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.15 லட்சம் பணம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.