ஈரோடு இடைத்தேர்தல் – மாதிரி வாக்குப்பதிவு தொடக்கம்!
வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழல் தேர்தல் ஆணையமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் பயன்படுத்தப்படவுள்ள 280 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளன. வாக்கு இயந்திரங்களை சோதனையிட்டு, மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனிடையே, ஏற்கனவே கடந்த மாதம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் சரிபார்க்கும் பணிகளும் நடைபெற்று இருந்தது.