பாஜக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் முன்னேர வேட்பாளரை அறிவித்த எடப்பாடி பழனிசாமி.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவை அடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். இடைத்தேர்தலை முன்னிட்டு பிரதான கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இடைத்தேர்தலுக்கானன் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அறிவித்தன. ஆனால், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி விவரம், யாருக்கு ஆதரவு என்ற குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
பாஜக இடைத்தேர்தல் குறித்த தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என தெரிவித்திருந்தது. இதுபோன்று, ஈரோட்டில் அதிமுக பணிக்குழுவுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய செங்கோட்டையன், நாளை காலை அதாவது இன்று தேர்தல் பணிமனை திறக்கப்படும் என்றும் அதன்பின் மகிழ்ச்சியான செய்தி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசு என்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஈரோட்டில் அதிமுக தேர்தல் பணிமனையை திறந்த உடன் வேட்பாளரை அறிவித்தது பழனிசாமி அணி.
இடைத்தேர்தலில் பாஜக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் முன்னரே வேட்பாளரை அறிவித்து பழனிசாமி அதிரடி காட்டியுள்ளார். யாருக்கு ஆதரவு என்று தெரிவிக்காமல் பாஜக காலம் தாழ்த்தி வரும் நிலையில், பழனிசாமியி அணி வேட்பாளரை அறிவித்துள்ளது.
அதிமுக அணிகள் எங்களது முடிவுக்காக காத்திருப்பதில் தவறு இல்லை என பாஜக கூறியிருந்தது. ஆனால், பாஜக நிலைப்பாட்டை எதிர்பார்க்காமல் அதிமுக வேட்பாளரை அறிவித்ததால், அதிமுகவில் இருந்து பாஜகவை கழற்றிவிட்டாரா? எடப்பாடி பழனிசாமி என கேள்வி எழுந்துள்ளது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…