ஈரோடு இடைத்தேர்தல் – மேலும் 1 மணி நேரம் நீட்டிப்பு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், இன்று மாலை 6 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதி.
ஈரோடு தேர்தல் களம்:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிராதான அரசியல் கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதுவும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவடைய உள்ளதால், ஈரோடு தேர்தல் களம் களை கட்டியுள்ளது.
தேர்தல் ஆணையம்:
ஈரோடு இடைத்தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. இன்று மாலை 6 மணிக்குள் அனைவரும் வெளியேற வேண்டும். இதன்பின் வெளியூர் நபர்கள் யாரும் தேர்தல் நடைபெறும் தொகுதியில் இருக்க கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதனால் போட்டிபோட்டு கொண்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஒரு மணி நேரம் நீட்டிப்பு:
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், இன்று மாலை 6 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைவதாக கூறப்பட்ட நிலையில், மேலும் 1 மணி நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்வதால் அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். வெளியூரை சேர்ந்தவர்கள் இன்று மாலை 6 மணிக்குள் வெளியேற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.