ஈரோடு இடைத்தேர்தலில் கூடுதல் வாக்கு இயந்திரங்களை வைக்க ஏற்பாடு என மாநில தேர்தல் ஆணையம் தகவல்.
கூடுதல் வாக்கு இயந்திரம்:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கூடுதல் வாக்கு இயந்திரங்களை வைக்க ஏற்பாடு செய்யப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இடைத்தேர்தலுக்கு ஏற்கனவே 286 வாக்கு இயந்திரங்கள், 310 விவிபேட் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கொல்லம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளி கிடங்கில் 1,000 வாக்கு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓரிரு நாட்களில் வாக்கு இயந்திரங்கள் ஒப்படைப்பு:
21 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 8 விவிபேட் இயந்திரங்களும் ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டன. வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு ஓரிரு நாளில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இதனிடையே, ஈரோடு கிளைக்கு இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகலின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டத்தை தொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
83 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு:
பிரதான கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்புமனு பரிசீலனையில் 121 வேட்புமனுக்களில் 38 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்பட 83 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. வேட்பு மனு ஏற்கப்பட்ட சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்தின் சார்பில் 191 சின்னங்கள் அடங்கிய பட்டியலும் வெளியிடப்பட்டது.
தேர்தல் ஆணையம் நடவடிக்கை:
ஒருபக்கம் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தாளாது வேட்பாளருக்காக பல்வேறு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபக்கம், இடைத்தேர்தலுக்காக மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு நடைவடிக்கைகளை மேற்க்கொட்னு வருகிறது. அந்தவகையில், வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் கூடுதல் வாக்கு இயந்திரங்களை வைக்க ஏற்பாடு செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…