ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் – பிரதமர் மோடி

சென்னை ஐஐடியின் 56-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி.இதனையொட்டி சென்னை வந்த பிரதமர் மோடி விமான நிலைய மேடையில் உரையாற்றினார்.அப்பொழுது அவரது உரையில், சென்னை ஐஐடி விழாவுக்காக வந்த என்னை, வரவேற்க திரண்ட மக்களுக்காக நன்றி .நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு முதன் முறையாக சென்னை வந்துள்ளேன்.
நான் அமெரிக்கா சென்ற போது தமிழ் தத்துவத்தை கூறினேன். அமெரிக்காவில் இந்தியாவை பற்றி நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது.உலக நன்மைக்காக இந்தியா நிறைய செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்களை வைத்து தான் முன்னேற்றத்திற்கு பாடுபட முடியும்.
இளைஞர்கள், முதியவர்கள், பணக்காரர்கள், ஏழைகள் என்ற ஏற்றத்தாழ்வு இல்லாமல், அனைவரும் ஒன்றிணைந்தால் தான் வளர்ச்சியை அடைய முடியும் .ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.காந்தியின் 150-வது ஆண்டு விழாவில் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளோம், காந்தியின் கொள்கைகளை முன்னெடுத்து செல்ல திட்டம் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025