சசிகலாவுடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதிகா சந்திப்பு.!

Default Image

சென்னை தி நகர் இல்லத்தில் சசிகலாவுடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதிகா சந்தித்துள்ளனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்திலேயே இருந்து ஜெயலலிதா படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார் சசிகலா. இதையடுத்து, சென்னை தி நகர் இல்லத்தில் சசிகலாவுடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதிகா சந்தித்துள்ளனர்.

அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி இருந்து வந்த நிலையில், சசிகலாவிடம் சரத்குமார் சந்தித்துள்ளார். சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதிரி சசிகலாவின் உடல்நலம் பற்றி விசாரித்தோம் என ராதிகா தெரிவித்துள்ளார். நன்றி மறப்பது நன்றன்று என்ற அடிப்படையில் சசிகலாவை சந்திக்க வந்தேன் என்றும் உடல்நலம் பற்றி விசாரித்தேன் எனவும் சரத்குமார் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்