மூன்றாம் பாலினத்தவருக்கும் சமவேலை, சமஊதியம் – துணை முதல்வர்
ஆண்-பெண் மட்டுமின்றி மூன்றாம் பாலினத்தவருக்கும் சமவேலை, சமஊதியம் கிடைக்க வேண்டும் என்பதே அம்மா அரசின் விருப்பம் – ஓபிஎஸ்
இதுகுறித்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஆண்-பெண் மட்டுமின்றி மூன்றாம் பாலினத்தவருக்கும் சமவேலை, சமஊதியம் கிடைக்கவேண்டும் என்பதே அம்மா அரசின் விருப்பம். மூன்றாம் பாலினத்தவர் மீதான தவறான பார்வையை மாற்றி சமுதாயத்தில் அவர்களுக்கு மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தருவதில் அம்மாவின் அரசு என்றும் துணைநிற்கும் என்று கூறியுள்ளார்.
மேலும், புதிதாக தொடங்கப்பட்ட புதிய வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள 13 திருநங்கை சகோதரிகளின் பணி சிறக்க எனது நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்-பெண் மட்டுமின்றி மூன்றாம் பாலினத்தவருக்கும் சமவேலை, சமஊதியம் கிடைக்கவேண்டும் என்பதே மாண்புமிகு அம்மாஅரசின் விருப்பம். மூன்றாம் பாலினத்தவர் மீதான தவறான பார்வையை மாற்றி சமுதாயத்தில் அவர்களுக்கு மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெற்றுத்தருவதில் அம்மாவின்அரசு என்றும் துணைநிற்கும்.
— O Panneerselvam (@OfficeOfOPS) February 15, 2021