#Breaking : உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் வெற்றி.! அதிமுக பொதுக்குழு செல்லும்.!
இபிஎஸ் தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்க கோரி ஓபிஎஸ் அணியினர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் ஜூலை மாதம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்க கோரி முதலில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அப்போது பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி இருந்தது.
தீர்ப்பு : இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மேல்முறையீடு செய்து இருந்தனர். இந்த வழக்கு இறுதி கட்ட விசாரணை, வாதங்கள் அனைத்தும் முடிந்து இன்று தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகி உள்ளது .
இபிஎஸ் வெற்றி : அதில் கடந்த வருடம் ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி – சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.